ரஜினிகாந்தின் அண்ணன் மனைவி கலாவதி நேற்று இரவு மாரடைப்பால் உயிரிழந்தார்.இச்செய்தி அறிந்த ரஜினிகாந்த் பெங்களூர் விரைந்துள்ளார்.Rajini brothers wife died Bangalore
ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு ரஜினியின் அண்ணன் சத்தியநாரயணராவ் மனைவி கலாவதிபாய் (72) உயிரிழந்ததாக செய்தி வந்துள்ளது.
சிறுவயதிலேயே ரஜினியின் பெற்றோர்கள் இறந்துவிட்டனர். அன்று அவருக்கு அன்பும் அரவணைப்பும் கொடுத்து வளர்த்தது ரஜினியின் அண்ணன் சத்தியநாரயணராவ் மற்றும் அவரது மனைவி கலாவதிபாய் .
அத்துடன், ரஜினியை சென்னை அனுப்பி திரைப்படங்களில் நடிக்க வைத்தது முதல் அவருடையை ஒவ்வொரு வளர்ச்சியிலும் கலாவதிபாய் சத்தியநாரயணராவ்வுக்கு மிகப்பெரிய பங்குண்டு.
இந்நிலையில், கலாவதிபாய் மறைவு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வெகு நாட்களாகவே இவருக்கு சிறுநீரகம் மற்றும் சர்க்கரை நோய் இருந்துள்ளது. இதையடுத்து அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து நேற்று இரவு 11.30 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இச்செய்தியை கேட்டதும், ரஜினி இன்று அதிகாலை விமானத்தின் மூலம் பெங்களூருக்கு புறப்பட்டார். மேலும், இன்று மாலை கலாவதிபாயின் இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளது.
<<MOST RELATED CINEMA NEWS>>
* சர்கார் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!
* ராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..!
* விஷாலுக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..!
* காதலியைப் பார்ப்பதற்காக பிக்பாஸ் வீட்டை விட்டு ஓடிய டேனியல்..!
* காய்கறி விற்று நிதி திரட்டிய நடிகை சமந்தா : காரணம் இது தானாம்..!
* வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு கோடிக்கணக்கில் நிதி வழங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்..!
* சீமராஜா ட்ரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு..!
* கர்ப்பமான சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்..!