மனைவியை தாக்க முற்பட்ட நபரை கோடாரியால் தாக்கி கொலை செய்த கணவர்

0
587
43 year old man killed deniyaya area

தெனியாயப் பகுதியில் மனைவியை கொலை செய்ய முற்பட்ட நபரொருவரை கோடரியால் தாக்கி கணவர் கொலை செய்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. (43 year old man killed deniyaya area)

தெனியாய அம்பகாஹேனே பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அதே பகுதியை சேர்ந்த 43 வயதான நபரொருவரே கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் குடிபோதையில் குறித்த பெண்ணின் வீட்டுக்கு வந்து அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ய முற்பட்ட போது குறித்த பெண் கூச்சலிட்டுள்ள நிலையில், அங்கு வந்த கணவர் கோடரியை கொண்டு அந்த நபரை தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே அந்த நபர் உயிரிழந்துள்ளதுடன், கோடரியால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை இன்றைய தினம் மொரவக்க நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெனியாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 43 year old man killed deniyaya area