விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘96’. ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்துள்ளார்.Vijay Sethupathy Trisha pairs 96
கோவிந்த் வஸந்தா இப்படத்திற்கு இசையமைத்திருக்க, மகேந்திரன் ஜெயராஜு – சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கோவிந்தராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ நிறுவனம் இதனை தயாரித்துள்ளார்.
அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர், பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
முதலில், படத்தை வருகிற செப்டம்பர் 7ம் திகதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். தற்போது, படத்தின் ரிலீஸை ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் படத்தின் புதிய ரிலீஸ் திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tag: Vijay Sethupathy Trisha movie 96
<RELATED CINEMA NEWS>
ஜெயம் ரவியுடனான அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
இம்முறை தவற விடமாட்டேன் – காஜல் அகர்வால்
‘நீயும் நானும் அன்பே’ வீடியோ பாடல் – ‘இமைக்கா நொடிகள்’
மனைவியுடன் மோதும் நாகசைத்தன்யா!!
எமது ஏனைய தளங்கள்