யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் அண்மைக்காலமாக மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய குள்ள மனிதர்களின் நடமாட்டம் தற்போது குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Jaffna dwarf humans issues)
வடமாகாண சபையின் 130 ஆவது அமர்வு நேற்றைய தினம் நடைபெற்ற போது, வடக்கில் இடம்பெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு வடமாகாண சட்டம் ஒழுங்கு அமைச்சர் என்ற ரீதியில் முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானத்தை வடமாகாண உறுப்பினர் சபா. குகதாஸ் தெரிவித்திருந்தார்.
குறித்த தீர்மானத்தை சபையில் முன்மொழிந்து உரையாற்றும் போதே அவ்வாறு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஒரு மாத கால பகுதிக்கு மேலாக வட்டுக்கோட்டை, அராலி, சங்கரத்தை, துணைவி, சண்டிலிப்பாய், சீரணி, மாசியப்பிட்டி, ஆனைக்கோட்டை, நவாலி, மானிப்பாய் போன்ற இடங்களில் உள்ளே வீடுகளுக்கு இரவு வேளைகளில் முகத்தை மூடிக்கட்டியவாறு இனந்தெரியாத நபர்கள் மக்களை அச்சுறுத்தினர்.
அத்துடன், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்திவிட்டு தப்பிச் செல்வதுடன் வீடுகளுக்கு கல் வீச்சு தாக்குதலையும் மேற்கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இவ்வாறு இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தலில் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இத்தகைய செயற்பாடுகளுக்கு பின்னணியில் அரச இயந்திரத்துடன் சேர்ந்தியங்கும் சிவில் உடை தரித்த நபர்கள் இருந்தனர்.
அவர்களை நாம் அடையாளம் கண்டு, அவர்கள் தொடர்பிலான விபரங்களை வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கையளித்தோம்.
அதன் பின்னர் ஒரு சில நாட்களில் குறித்த சிவில் உடை தரித்தவர்கள் அப்பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நிலையிலேயே தற்போது குள்ள மனிதர்களின் நடமாட்டம் ஓய்ந்துள்ளதென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வவுனியாவில் கைக்குண்டு மீட்பு
- மஹியங்கனையில் தந்தை, மகளின் சடலங்கள் மீட்பு
- இந்தியாவில் இருந்து தங்கத்தை கடத்திய பெண் கைது
- மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்
- அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம்
- ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது
- பதவி விலகினார் ஆறுமுகன் ; அனுஷியாவிற்கு பொதுச் செயலாளர் பதவி
- வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Jaffna dwarf humans issues