அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம்

0
595
Two weeks time government

அதிகரிக்கப்பட்ட போக்குவரத்து தண்டப்பணத் தொகையை சீர்திருத்தம் செய்வதற்கு அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படுவதாக அகில இலங்கை தனியார் பேரூந்து சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பியன்ஜித் இதனைக் குறிப்பிட்டார். (Two weeks time government)

இதனடிப்படையில் இரண்டு வார காலத்திற்குள் தண்டப்பணம் தொகையில் மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்றால் பணிப் புறக்கணிப்பு போராட்டம் ஒன்றுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் கூடிய அகில இலங்கை தனியார் பேரூந்து சங்கத்தின் நிறைவேற்று சபைக் குழு கூட்டத்தின் போது, இதற்கான தீர்மானம் ஏகமனதாக எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு பின்னர் தமது சங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Two weeks time government