தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்த மகன்!

0
486
son strangled murdered mother

{ son strangled murdered mother }
வீரகெடிய, ஹகுருவெல பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வீரகெடிய, ஹகுருவெல பகுதியில் கடந்த 27 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அன்றை தினம் வீரகெடிய பொலிஸாரிற்கு தொலைபேசி மூலம் அழைப்பொன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் உயிரிழந்த பெண்ணின் மூத்த மகனை கைது செய்துள்ளனர்.

கடந்த 27 ஆம் திகதி உணவு பரிமாறிக்கொண்டிருக்கும் போது குறித்த பெண்ணின் மூத்த மகனால் தாக்கப்பட்டு பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக உயிரிழந்த பெண்ணின் இளைய மகன் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

காணிப்பிரச்சினை காரணமாக இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Tags: son strangled murdered mother

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites