‘தமிழனே விழித்திடு மகாவலியை எதிர்த்திடு’; முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

0
1011
Mahaweli Development Project massive protest mullaitivu

மகாவலி திட்டத்தினூடாக தமிழர் மரபுரிமை பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘தமிழனே விழித்திடு மகாவலியை எதிர்த்திடு’ என்ற கோஷத்துடன், மாபெரும் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. (Mahaweli Development Project massive protest mullaitivu)

பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை ‘மகாவலி அபிவிருத்தி திட்டம்’ என்ற பெயரில் தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை குடியேற்றம் செய்கின்றது.

இதனை முற்றாக ஏற்றுக்கொள்ளாத தமிழ் மக்கள் தமது தாயக மண்னை எந்த இனவாதிகளும் சுபீகரிக்க விடமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு இராயப்பர் ஆலய முன்றலில் இருந்து பேரணியாக முல்லைத்தீவு அரச அதிபர் அலுவலகம் வரை சென்று அங்கு மாபெரும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

தமது தாயக நிலத்தை யாரும் சூரையாடவிடமாட்டோம் என்று மக்கள் கடும் சீற்றத்துடன் கோசங்களை இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, எழுப்பியுள்ளனர்.

இதில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

மீள்குடியேற்றத்தின் பின்னர் இதுவே தமிழ் மக்களினால் மேற்கொள்ளப்படும் பாரியளவிலான எதிர்ப்பு போராட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Mahaweli Development Project massive protest mullaitivu