12 ஆண்டுகளுக்கு பின் மாதவனுடன் இணையும் நாயகி

0
430
Madhavan Anushka Shetty Rejoining, Madhavan Anushka Shetty, Madhavan Anushka, Madhavan, Anushka Shetty, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News, new tamil movie news, tamil movie news
2006ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம், ‘ரெண்டு’. இதில் ஹீரோவாக மாதவன் நடித்திருக்க அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார்.Madhavan Anushka Shetty Rejoining

இப்படத்தில் இடம்பெற்ற ‘மொபைலா மொபைலா’ பாடல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் அனுஷ்கா.

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த ஜோடி புதிய படம் ஒன்றில் கை கோர்க்க உள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்க இருக்கும் இந்த படத்திற்கு சைலன்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைக்கதை ஆசிரியர் கோனா வெங்கட் திரைக்கதை எழுதும் அதே வேளை, பீப்புள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தோடு இணைந்து படத்தையும் தயாரிக்கிறார்.

சூப்பர் நேச்சுரல் திரில்லர் பாணியில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது.

செப்டம்பர் முதல் வாரத்தில் அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ஹாலிவுட் நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tag: Madhavan Anushka Shetty Rejoining