ஊழல் மிகு தேர்தல் முறை முடிவு பெற்றது: ஜனாதிபதி அறிவிப்பு!

0
393
Corruption poll results President

{ Corruption poll results President }

நாட்டில் நிலவிய ஊழல் மிகு தேர்தல் முறைமையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கான பலம்வாய்ந்த சூழல், தற்போதைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆசிய தேர்தல் பங்குதாரர்கள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அனைத்துத் தேர்தல்களையும் சுதந்திரமாகவும் நீதியாகவும் அமைதி மற்றும் சுயாதீனமாக நடாத்தி, நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது தமது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய நாடுகளுக்கிடையிலான புதிய அறிக்கையின் பிரகாரம் இலங்கை நீதித்துறை, பக்கசார்பின்மை குறித்து மிக உயர்ந்த நிலையில் காணப்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: Corruption poll results President

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites