வவுனியா சிறைச்சாலைக்குள் இரு இளம் பெண்கள் செய்த செயல்!

0
345
Two young women Vavuniya Prison Arrested

வவுனியா சிறைச்சாலைக்குள் கஞ்சா மற்றும் ஹொரோயின் கடத்த முற்பட்ட இளம் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Two young women Vavuniya Prison Arrested

மேற்படி இரு பெண்களையும் நேற்று மாலை 5.00 மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகள் மடக்கி பிடித்து வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிறைச்சாலைக்கு அருகே காணப்படும் வீதியில் நின்று சிறைச்சாலை வளாகத்தினுள் போதைப்பொருளை வீச முற்பட்ட சமயத்திலேயே இவ் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் தேக்கவத்தை பகுதியினை சேர்ந்த 27வயதுடைய பெண்ணிடமிருந்து 12கிராம் கஞ்சாவும், சாம்பல் தோட்டம் பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணிடமிருந்து 140கிராம் ஹொரோயினும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் முன்னிலையில் இவர்களை முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

tags :- Two young women Vavuniya Prison Arrested

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites