ஈராக் மற்றும் ஈரான் நாடுகளில் நிலநடுக்கம்

0
359
Earthquake Iraq Iran tamil news

ஈராக் நாட்டின் பாக்தாத் நகரம் மற்றும் அந்நாட்டின் எல்லையை ஒட்டிய ஈரான் நாட்டின் கெர்மன்ஷா நகரம் ஆகிய பகுதிகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. Earthquake Iraq Iran tamil news

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து ரிக்டர் அளவில் 3.0க்கு மேல் 2 நிலநடுக்கங்களும் உணரப்பட்டுள்ளன.

அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், கெர்மன்ஷா நகரின் வடக்கு வடமேற்கு பகுதிக்கு 88 கிலோ மீட்டர் தொலைவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

கடந்த நவம்பரில் கெர்மன்ஷாவின் கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஏற்பட்ட 7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 530 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இது கடந்த 10 வருடங்களில் ஈரான் நாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் ஆகும்.

tags ;- Earthquake Iraq Iran tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites