வீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்

0
365
chekka chivantha vaanam trailer, chekka chivantha vaanam, chekka chivantha vaanam official trailer, CCV trailer, Sekka sivantha vaanam Trailer, trailer, Sekka sivantha vaanam, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

காற்று வெளியிடை படத்திற்கு பின் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும்  செக்கச்சிவந்த வானம் படத்தின் டிரைலர் இன்று காலை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.chekka chivantha vaanam trailer

அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

படத்தில் சேநாதிபதி என்ற கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் மாபெரும் தொழிலதிபர். அவரின் மூத்த மகனாக அரவிந்த்சாமியும், இரண்டாவது மகனாக அருண் விஜய்யும், கடைக்குட்டியாக சிம்புவும் தனது அப்பாவின் இடத்தை பிடிக்க முயற்சி செய்கின்றனர். இன்னொரு பக்கம் போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஜய் சேதுபதி, தனது நண்பன் அரவிந்த்சாமி மூலம் பிரகாஷ்ராஜின் இடத்தை பிடிக்க நினைக்கிறார். இதனை மையப்படுத்தியே கதை நகர்வதாக தெரிகிறது.

மொத்தத்தில் உனக்கு யாராவது பழைய நண்பன் இருந்தால் அவனை நம்பாதே, போன்ற அழுத்தமான வசனங்களுடன் குடும்பம் மற்றும் நட்புக்கு இடையே நடக்கும் போராட்டத்தை மையப்படுத்தி காதல், நட்பு, அதிரடி என அனைத்தும் கொண்ட படமாக செக்கச்சிவந்த வானம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அரவிந்த்சாமியின் மனைவியாக ஜோதிகாவும், அருண்விஜய்யின் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷும், சிம்புவின் ஜோடியாக டயானா எரப்பாவும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையுடனும் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளுடனும் வெளியாகி இருக்கும் டிரைலர்  படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னமும் கூட்டியுள்ளது. படம் செப்டம்பர் 28ம் திகதி ரிலீசுக்கு தயாராக உள்ளது.

#CCV #ChekkaChivanthaVaanam #ChekkaChivanthaVaanamOfficialTrailer #ChekkaChivanthaVaanam Trailer

CREDIT – LYCA PRODUCTIONS

 

Tag: chekka chivantha vaanam trailer, chekka chivantha vaanam, chekka chivantha vaanam official trailer, CCV trailer, Sekka sivantha vaanam Trailer, trailer, Sekka sivantha vaanam, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

எமது ஏனைய தளங்கள்