வடக்கு பட்டதாரிகள் படித்தவர்களா? முட்டாள்களா?

0
579

வடக்கு மாகாணத்தில் நிலவி வரும் பதவி வெற்றிடங்களை நிரப்ப அங்குள்ள பட்டதாரிகளுக்கு தகுதி இல்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறியுள்ள விடயம் தொடர்பில் பலத்த கருத்து மோதல்கள் நிலவி வருகின்றது.

வேலை வாய்ப்புகளை வழங்கக்கோரி ஒருபுறம் வேலையற்ற பட்டதாரிகளின் குரல் ஒலித்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பொறுப்பற்ற விதத்தில் இந்த கருத்தை கூறியுள்ளார் என பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் உண்மை நிலவரம் என்ன?

பட்டதாரிகளின் தகுதிநிலை தொடர்பில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறியுள்ள விடயத்தை ஆராய முன்னர், வடக்கு மாகாணத்தில் நிலவிவரும் பதவி வெற்றிடங்களை எடுத்து பார்த்தால், 2000 பேருக்கான கணித, விஞ்ஞான ஆசிரியர்களுக்கான பதவி வெற்றிடம் உள்ளது.

அதுமட்டுமன்றி வட மாகாணத்தில் மொத்தம் 6338 வெற்றிடங்கள் இருப்பதாகத் தெரியவருகின்றது. அவற்றுள் மத்திய அரசினால் நிரப்பப்பட வேண்டிய வெற்றிடங்கள் 3329. மாகாண அரசினால் நிரப்பப்பட வேண்டியவை 3009.

ஆனால் பட்டதாரிகள் எதிர்பார்க்கும் விருப்பத்துக்குரிய வெற்றிடமாக “அபிவிருத்தி உத்தியோகத்தர்” பதவி நிலையே உள்ளது.

குறித்த நிலைக்கான பிரதான காரணமாக , பட்டதாரிகள் மிகவும் இலகுவான பதவி நிலைகளை குறிவைக்கும் நோக்கம் என்ன?

அது மட்டுமன்றி , நேர்முக தேர்வுகள் விடயத்திலும் பட்டதாரிகள் மிகவும் இலகுவான போக்கை எதிரபார்த்தே உள்ளனர்.

இவையனைத்தும் குறித்த பட்டதாரிகளின் அறிவு மட்டம் தொடர்பில் பலத்த சந்தேகங்களை எழுப்புவையாகவே உள்ளது. மிகவும் கடினமான துறைகளுக்கு விண்ணப்பிக்கும் ஆர்வமற்றவர்களாகவே வடக்கு பட்டதாரிகள் இன்னமும் உள்ளமை கவலைக்குரிய விடயமே.

வடக்­கில் வேலை வாய்ப்­புக்­களை வழங்­கும் சந்­தர்ப்­பம் இருந்­தும் அவற்­றைச் சரி­யா­கப் பயன்­ப­டுத்த வடக்கு மாகா­ண­சபை தவ­றி­யுள்­ளமை வடக்கு மாகாண சபை­யின் செயற்­றி­றன் அற்­ற­ செ­யற்­பா­டாக கருதப்பட முதல் , அங்குள்ள பட்டதாரிகளின் தகுதி நிலையே பெரும் சவாலாக உள்ளமையை ஆராய வேண்டும்.

அதைமட்டுமன்றி பல்­க­லைக்­க­ழ­கம் வரை­யில் இல­வ­சக் கல்­வி­பெற்று உயர் நிலையை அடை­யும் பலர் நல்ல தகுதி நிலையை கொண்டிருந்தும் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவதும் கூட இந்த தகுதிநிலை பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகின்றது.

உதாரணமாக வடக்கு மாகாண வைத்தியசாலைகளைகளில் தாதிகளுக்கு வெற்­றி­டம் உண்டு. ஆனால் தகுந்த தமி­ழில் பேசும் தாதி­கள் இல்­லா­த­தால் வெளிமாவட்ட தாதிகளி நியமனம் செய்யவேண்டிய கட்டாயம் உண்டாகியுள்ளது.

இலகுப் பாடங்களைப் படித்துப் பட்டம் பெற்ற பட்டதாரிகள் பலர் வேலைவாய்ப்பின்றி இருப்பது அவர்கள் தகுதிக்குரிய வேலைவாய்ப்புகள் இல்லாமையே என்பது அப்பழுக்கற்ற உண்மையாகும்.

இந்த உண்மை நிலையை உணர்ந்தவர்களாக எதிர்காலத்தில் தகுதிநிலையை பூரணப்படுத்தும் பட்டப்படிப்புக்களில் ஈடுபடுவதே வேலைவாய்ப்புகளை சமநிலைப்படுத்த உதவும் என்பதே உண்மை.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites