இங்கிலாந்தில் வித்தியாசமாக காதலை வெளிப்படுத்திய இளைஞர்!: கண்ணீர் விட்டழுத காதலி

0
264
Younger expressed love England girlfriend tamil news

இங்கிலாந்தில் சகோதரியின் திருமண நிகழ்வில், இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலை காதலியிடம் வெளிப்படுத்திய நிகழ்வு நடந்துள்ளது. Younger expressed love England girlfriend tamil news

இங்கிலாந்தில் Stakeford என்ற கிராமத்தை சேர்ந்தவர் Charlene McGhee (31). இவருக்கு கடந்த சனிக்கிழமையன்று St Wilfrid’s ஆலயத்தில் Alan என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அவருடைய திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் திருமணம் முடிந்தவுடன், மணப்பெண் திரும்பி நின்று மக்களை நோக்கி பூங்கோத்தை வீசும் நிகழ்வு நடைபெற்றது. அனைவரும் பூங்கொத்தை பிடிப்பதற்கு ஆவலாக காத்திருந்தனர். அதற்கு ஆயத்தமான Charlene பூங்கோத்தை வீசாமல், சட்டென்று ஆட்கள் இருக்கும் பகுதியை நோக்கி நடந்து வந்தார்.

என்ன செய்கிறார் என தெரியாமல் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். வேகமாக தன்னுடைய சகோதரன் Antoni Kerr-ன் காதலியை நோக்கி நடந்து வந்த Charlene, அவரது கையில் பூங்கோத்தை கொடுத்தார். அதனை அந்த பெண் கையில் வாங்கிய அடுத்த நிமிடமே அவரது பின்புறத்தில் இருந்து ஒரு நபர் தோள் மேல் கை வைத்தார்.

யார் என அந்த பெண் திரும்பி பார்க்கையில், Antoni கையில் ஒரு மோதிரத்தை வைத்துக்கொண்டு Rebecca-விடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார். அதனை பார்த்து மகிழ்ச்சியில் லேசாக கண்ணீர் விட்ட Rebecca காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். இதனை பார்த்த அனைவரும் உற்சாக மிகுதியில் சத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

source : Storyful Rights Management

tags :- Younger expressed love England girlfriend tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************