வெளிநாட்டு ராஜதந்திரிகள் சிலரை, இலங்கை தமிழரசு கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இரகசியமாக சந்தித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. TNA Mavai Senathiraja Meets Foriegn Representatives Tamil News
பிரித்தானிய பிரதிநிதிகள் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு இடையில் நேற்று இரகசிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்று இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலை பதிவு செய்வதற்காக ஊடகவியலாளர்கள் சென்ற போது அனுமதி வழங்கப்படவில்லை.
கலந்துரையாடலின் பின்னர் பிரித்தானிய பிரதிநிதிகளிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். எனினும் அதற்கு அவர்கள் பதிலளிக்காமல் ஹோட்டலில் இருந்து வெளியேறியுள்ளனர்.
எனினும் வடக்கில் தற்போது உள்ள நிலைமை தொடர்பில் பிரித்தானிய குழுவினருடன் கலந்துரையாடியதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த பிரதிநிதிகள் யார் என அவரிடம் வினவிய போது அவர் பதிலளிக்காமல் கேள்வியை நிராகரித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய தகவல்; அமைச்சரவையில் தீர்மானம்
- ஜனாதிபதி தேர்தல்; சங்கக்காரவின் பெயர் முன்னிலை – ஐரோப்பிய பிரதிநிதிகள் சந்திப்பு
- 19 வயது பெண்ணை பாலியல் துஷ்பிரயோகப்படுத்த முயற்சி
- 13850 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது
- கிளிநொச்சி மாணவி பலி; இருதயத்தில் கிருமித் தொற்று காரணம்
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்