ஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி

0
637

சவுதிஅரேபியா ஐந்து பெண் மனித உரிமை பணியாளர்களிற்கு மரண தண்டனையை விதிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. Human Rights Saudi Death Penalty

சவுதி அரேபியாவின் இரகசிய பயங்கரவாத தடுப்பு விசாரணை நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் விசாரணைகளின்போது ஐந்து பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் மரண தண்டனை விதிக்கவேண்டும் என சவுதி அரேபியா அரசின் சட்டத்தரணிகள் வாதாடியுள்ளனர்.

இஸ்ரா அல் கொம்ஹம் என்ற பெண்ணும் மரண தண்டஈயை எதிர்கொண்டுள்ளார்.

மனித உரிமை பணிகளிற்காக மரணதண்டனையை எதிர்கொள்ளும் முதல் பெண் இவர் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை தூண்டியது, அவர்களிற்கு தார்மீக ஆதரவை வழங்கியது உட்பட பல குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் இவர்கள் மீது சுமத்தியுள்ளனர்.

மரணதண்டனையை நிறைவேற்றுவதே கொடுமையான விடயம் என தெரிவித்துள் சர்வதேச மனித கண்காணிப்பகத்தின் மத்திய கிழக்கிற்கான இயக்குநர் சரா லீ வன்முறைகளில் ஈடுபட்டதாக கூட குற்றம்சாட்டப்படாத இஸ்ரா அல் கொம்ஹமிற்கு தண்டனையை நிறைவேற்றுவது மிகக்கொடுமையான விடயம் என தெரிவித்துள்ளார்.

இஸ்ரா அல் கொம்ஹமும் அவரது கணவரும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டின் கீழ் 2015 ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை