79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது

0
508
son attack mother stone hatton bogawanthalava latest news local

வீட்டில் இருந்த தண்ணீர் குழாயில் முகத்தை கழுவியதால் தனது 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகளை திககொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். (35 year old daughter arrested mother Hospital)

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, குறித்த பெண்ணை கைதுசெய்து மாத்தறை விசேட நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த பெண்ணை மாத்தறை மேலதிக மாவட்ட நீதவான் பவித்ரா சஞ்சீவனி, ஒரு இலட்ச ரூபா சரீர பிணையில் விடுவித்ததுடன், இந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 28 திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான இந்த வயோதிபப் பெண் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தனது 35 வயது மகள் வீட்டில் இருந்த தண்ணீர் குழாயில் தனது முகத்தை கழுவிக்கொண்டிருந்த போது ‘நீ அங்கே என்ன செய்கின்றாய், முகத்தை கழுவாதே’ எனக் கூறி தனது கன்னத்தில் தாக்கியுள்ளார்.

இதனால் தனது காது கேட்காத நிலையில், குறித்த வயோதிபத் தாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 35 year old daughter arrested mother Hospital