வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து

0
489

வவுனியாவில் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. (Vehicle accident vavuniya nedunkerny)

இந்த சம்பவம் இன்று காலை வவுனியா நெடுங்கேணி சன்னாசிப்பரந்தன் பாலத்தில் இடம்பெற்றுள்ளது.

பிறாடோ வாகனம் ஒன்றே வீதியை விட்டு விலகியுள்ளதாகவும் நேற்றிரவு கொழும்பில் இருந்து வைத்தியர் ஒருவரை முல்லைத்தீவில் இறக்கிவிட்டு, இன்று அதிகாலை கொழும்பு திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Vehicle accident vavuniya nedunkerny