வீடியோ: அனிருத் வெளியிட்ட சமந்தாவின் ‘யூ டர்ன்’ டிரெய்லர்

0
334
Samantha UTurn movie trailer released Anirudh tamil news

‘லூசியா’ புகழ் பவன் குமார் இயக்கத்தில் 2016ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான படம் ‘யூ டர்ன்’. இப்படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆனது. ஹீரோயின் கதையம்சம் கொண்ட இந்தப்படத்தில் ஷரதா ஸ்ரீநாத் நடித்திருந்தார். Samantha UTurn movie trailer released Anirudh tamil news

இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் குயின் ஆஃப் சவுத் இந்தியா’ நடிகை சமந்தா நடிக்கிறார்.

இப்படத்தில் ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா, நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கன்னடத்தில் இப்படத்தை இயக்கியவரே, இவற்றையும் இயக்குகிறாராம். மிஸ்ட்ரி – த்ரில்லர்  படமான இதனை  ‘ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் – VY கம்பைன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

அண்மையில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டிரெய்லரை பிரபல இசையமைப்பாளர் அனிருத் தமது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

படத்தை செப்டம்பர் 13ம் திகதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Credit: sony music India

Tags: Samantha UTurn movie trailer released Anirudh tamil news

எமது ஏனைய தளங்கள்