பியார் பிரேமா காதல் ரைசா அடுத்து பாலாவின் இயக்கத்தில்

0
205
Pyaar Prema Kadhal Raiza next movie tamil news

கடந்த வெள்ளிக்கிழமை திரையை தொட்டது, யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பாளராக அறிமுகமான படம், ப்யார் பிரேமா காதல். Pyaar Prema Kadhal Raiza next movie tamil news

இத்திரைப்படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாக போட்டியாளர்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் இளைஞர்களிடமிருந்தும், விமர்சகர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

முதல் வெற்றிப்படத்தை தொடர்ந்து ரைசா, இயக்குனர் பாலாவின் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது பாலா விக்ரமின் மகன் த்ருவ்வை வைத்து வர்மா என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

தெலுங்கில் வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்தப்படம். இப்படத்தில் கதாநாயகியாக நாயகி அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமொன்றில் ரைசா வில்சன் நடிப்பது உறுதியாகியுள்ளது.

Tags: Pyaar Prema Kadhal Raiza next movie tamil news

எமது ஏனைய தளங்கள்