கொழும்பு – தலைமன்னார் ரயில் சேவை 3 மாதங்களுக்கு தடங்கல்!

0
611
Colombo - Mannar Train Service Restricted 3 month Period

கொழும்பு கோட்டை முதல் தலைமன்னாருக்கு இடையிலான ரயில் சேவையை இன்று முதல் மூன்று மாதங்களுக்கு மதவாச்சி வரை மட்டுப்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. Colombo – Mannar Train Service Restricted 3 month Period Tamil News

ரயில் மார்க்கத்தில் உள்ள பாலமொன்றின் புனர்நிர்மாணப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னாருக்கும், தலைமன்னாரிலிருந்து கொழும்பிற்கும் நாளாந்தம் நான்கு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது ரயில் சேவை மட்டுப்படுத்தப்படுவதால், தலைமன்னாருக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி மதவாச்சி ரயில் நிலையத்திலிருந்து விசேட பஸ் சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites