இந்தியாவின் சிறந்த பிரதமர்களில் ஒருவர் அடல் பிகாரி வாஜ்பாய் குறித்து பலர் அறிந்திராத பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. (Atal vbihari vajpayee achievement life history)
இவற்றில் அறிய வேண்டிய ஏழு விஷயங்கள் குறித்த ஒரு பார்வை, மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி ஆசிரியரின் மகனாக பிறந்தவர் அடல் பிகாரி வாஜ்பாய்.
1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு பெற்றதன் மூலம் அரசியலில் வாய்பாய் நுழைந்தார். குவாலியர் நகரில் உள்ள விக்டோரியா கல்லூரியில் அரசியல் பட்டப்படிப்பை முடித்தார்.
அத்துடன், 1996 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி முதல் முறையாக வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்றார்.
அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அரசு 13 நாட்கள் மட்டுமே நீடித்ததுடன், கூட்டணி கட்சிகள் ஆதரவு விலகியதை அடுத்து ஆட்சி கலைந்தது.
1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.
மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் கவிழ்க்கப்பட்டது. இதுவே முதல்முறையாக 13 மாதங்கள் ஆட்சி நீடித்திருந்தது.
வாஜ்பாய் அணுகுண்டு சோதனை இந்த ஆட்சிக் காலத்தின் போது தான் அதிரடி நடவடிக்கைகள் பலவற்றை கொண்டார்.
1998 ஆம் ஆண்டு மே 11 ஆம் திகதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது. நாடு நடத்திய இரண்டாவது அணுகுண்டு சோதனை இதுவாகும்.
அணுகுண்டு சோதனைக்கு பின்னர் 1999 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் லாகூருக்கு பஸ் மூலம் வாஜ்பாய் பயணித்து, பாகிஸ்தானுடன் உறவை விரும்பினார்.
ஆனால் இதன் பின்னர் மூன்று மாதத்திலேயே மே மாதம் பாகிஸ்தான் இராணுவம், கார்கில் பகுதியில் ஊடுருவி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா வெற்றிக்கொடி நாட்டியது.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 1999 ஆம் ஆண்டு 303 லோக்சபா தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது.
ஒக்டோபர் 16 ஆம் திகதி வாஜ்பாய் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். கார்கில் போரின் போது பாகிஸ்தான் இராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷரப் அப்போது பாகிஸ்தான் ஜனாதிபதியாக இருந்தார்.
இருப்பினும் ஆக்ராவில் இரு நாட்டு நல்லுறவை மேம்படுத்தும் வகையில் 2001 ஆம் ஆண்டில் உச்சி மாநாடு ஏற்பாடு செய்தார் வாஜ்பாய். அதற்கு முஷ்ரப்புக்கு சிறப்பை அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும் அந்த உச்சி மாநாடு தோல்வியில் முடிவடைந்தது.
நரேந்திர மோடிக்கும் வாஜ்பாய்க்கும் நடுவே பெரிய நல்லுறவு இருந்ததாகக் கூறமுடியாது. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் மதக் கலவரம் ஏற்பட்டது.
அப்போது குஜராத் முதல்வராக இருந்த, நரேந்திர மோடியைப் பார்த்து ராஜ தர்மத்துடன் நடந்து கொள்ளுமாறு வாஜ்பாய் எச்சரிக்கை விடுத்தார்.
கலவரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை இராஜினாமா செய்யுமாறு மோடிக்கு நெருக்கடியை வாஜ்பாய் கொடுத்தார்.
ஆனால் அப்போது மோடிக்கு பக்கபலமாக இருந்து பாதுகாத்தவர் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி ஆவார்.
மதச்சார்பற்ற தலைவர் இந்துத்துவாவை வலியுறுத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் ஈர்க்கபட்டவர் தான் என்ற போதிலும், மதசார்பற்ற தலைவராகத் தான் வாஜ்பாய் விளங்கினார்.
1991 ஆம் ஆண்டு அத்வானி நடத்திய ரத யாத்திரையில், வாஜ்பாய்க்கு ஒப்புதல் இல்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது கூட, வாஜ்பாய் அயோத்திக்கு செல்லவில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டு இருக்கக்கூடாது என்று வாஜ்பாய் கருத்து தெரிவித்திருந்தார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- யாழில் ஓடிக்கொண்டிருந்த காரில் ஏற்பட்ட பயங்கர சம்பவம்
- முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் இன்று மாலை தகனம் (முழு விபரம் இதோ)
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- யாழில் சூறாவளி; ஹெலிகொப்டரில் பறந்த வினாத் தாள்கள்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- மடுத் தேவலாயத்தில் பக்தர்களுக்கு திடீரென ஏற்பட்ட அச்சம்; இன்று ஆவணி உற்சவம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Atal vbihari vajpayee achievement life history