ஜனனி வீட்டில் துக்க சம்பவம் : அது தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் துள்ளிக் குதிக்கும் ஜனனி..!

0
240
Biggboss Janani uncle passes away tamil news

தமிழில் ஒளிபரப்பாகிவரும் “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் ஜனனி, தனது தாய்மாமா இறந்தது தெரியாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலகலப்பாக இருந்து வருகிறார். Biggboss Janani uncle passes away tamil news

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ”பிக்பாஸ்” நிகழ்ச்சியில் நடிகை ஜனனி, மும்தாஜ், ரித்விகா, யாஷிகா, ஐஸ்வர்யா, ஆர்ஜே வைஷ்ணவி, பாலாஜி, சென்ட்ராயன், டேனி, மகத், ஷாரிக், பொன்னம்பலம், மமதி,ரம்யா, நித்யா, ஆனந்த் வைத்தியநாதன் உள்ளிட்ட 16 பேர் பங்கேற்றனர். இவர்களில் ஷாரிக், பொன்னம்பலம், மமதி,ரம்யா, நித்யா, ஆனந்த் வைத்தியநாதன் ஆகியோர் வெளியேறி விட்டனர்.

தற்போது நடிகை ஜனனி, மும்தாஜ், ரித்விகா, யாஷிகா, ஐஸ்வர்யா, ஆர்ஜே வைஷ்ணவி, பாலாஜி, சென்ட்ராயன், டேனி, மகத் ஆகியோருடன் சண்டையும் சச்சரவுமாக நகர்கிறது நிகழ்ச்சி.

”அவன் இவன்” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஜனனி. பிக்பாஸ் வீட்டில் அனைவரையும் பேலன்ஸ் செய்வது போல் பட்டும் படாமல் அதிக சர்ச்சைகளில் சிக்காமல் இருக்கிறார் ஜனனி.

மும்தாஜ், ஐஸ்வர்யா ஆகியோர் சக போட்டியாளர்களிடம் எந்நேரமும் சண்டை போட்டு வரும் நிலையில் தான் உண்டு தனது வேலையுண்டு என செல்கிறார் ஜனனி.

இந்நிலையில், ஜனனி வீட்டில் ஒரு துக்க சம்பவம் நடந்துள்ளது. இது தெரியாமல் ஜனனி பிக்பாஸ் வீட்டில் கலகலப்பாக இருந்து வருகிறார். அதாவது ஜனனியின் தாய் மாமா மரணமடைந்து விட்டார்.

ஆனால் இதுதெரியாமல் ஜனனி பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் சிரித்துபேசி கலகலப்பாக இருந்து வருகிறார். தனது தாய்மாமா இறந்த செய்தியை அறிந்தால் ஜனனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விடுவார்.

இதன்காரணமாக ஜனனிக்கு தனது தாய் மாமா இறந்த செய்தி தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் போட்டியாளர்கள் இருக்க வேண்டும்.

மேலும், அவர்களுக்கு வெளியில் நடக்கும் எந்த விஷயமும் தெரிவிக்கப்படாது. வெளி நபர்களுடன் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் எந்த தொடர்பும் வைத்திருக்ககூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

<<MOST RELATED CINEMA NEWS>>

சாயிஷாவுடன் காதல் வலையில் வீழ்ந்த பிரபுதேவா.. : கிளம்பிய கிசுகிசுக்கள்..!

விஜய் அழகானவர் – சூர்யா ரொம்ப நல்லவர் : பெரிய ஆட்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்ரீ ரெட்டி..!

தமிழ் சினிமாவில் சூடு பிடிக்கும் விலங்கு சீசன் : யானை குரங்கு எல்லாம் முடிந்து இப்போ ஒட்டகமாம்..!

இணையத்தில் வைரலாகும் ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத்தின் தோற்றம்..!

மூன்றாவது குழந்தைக்கு தாயாகும் ரம்பாவின் வளைகாப்பு புகைப்படங்கள்..! (படங்கள் இணைப்பு)

சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..!

அமிதாப்பச்சன் வேடம் ஏற்கும் அஜித் : உற்சாகத்தில் ரசிகர்கள்..!

நயனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? : அதிர்ச்சியில் உறைந்த சினிமாவுலகம்..!

Tags :-Biggboss Janani uncle passes away tamil news