இன்றிரவு முதல் இராணுவ பஸ்கள் சேவையில் ..!

0
1051
sri lankan army bus public transport service

மக்கள் அசௌகரியங்களை குறைப்பதற்காக இன்றிரவு முதல் இராணுவ பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.(sri lankan army bus public transport service,Global Tamil News, Hot News, )

கொழும்பில் இன்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர், “வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அபராத திட்டம் எக்காரணம் கொண்டும் மீளப்பெறப்படப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், புதிய அபராதத் திட்டத்தை மீளப்பெறுமாறு பஸ் உரிமையாளர்கள் கோரவில்லை. பஸ் ஊழியர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கான அவர்களது கோரிக்கைகள் ஒருபோதும் நிறைவேற்றப்பட மாட்டாது.

தனியார் பஸ் ஊழியர்களின் இன்றைய போராட்டம் பாரிய வெற்றியளிக்காத போதிலும், சில பிரதேசங்களில் போராட்டம் காரணமாக மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இன்றிரவு முதல் இராணுவ பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags: sri lankan army bus public transport service