இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்

0
497
India Tamil News, Tamil News, Tamil

இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. Vajpayee Passes away Tamil News

வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.