திருட்டுப்போன 12-ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையை இந்தியாவிடம் ஒப்படைத்த பிரிட்டன்..

0
241
Britain handed 12th-century Buddha statue India tamil news

இந்தியாவில் இருந்து 57 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுப்போன 12-ம் நூற்றாண்டை சேர்ந்த வெண்கல புத்தர் சிலையை பிரிட்டன் பொலிசார் இந்தியாவிடம் ஒப்படைத்தனர். Britain handed 12th-century Buddha statue India tamil news

வெண்கலத்தால் ஆன 12-ம் நூற்றாண்டை சேர்ந்த 14 புத்தர் சிலைகள் பீகார் மாநிலம் நாளந்தாவில் உள்ள தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த சிலைகள் 1961-ம் ஆண்டு திருட்டுப் போனது.

இந்த சிலைகளில் ஒரு புத்தர் சிலை மட்டும் பல கைகள் மாறி இறுதியில் லண்டனில் உள்ள கலை மற்றும் பழம்பொருட்கள் கூடத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏலத்துக்கு விடப்பட இருந்தது. இந்த சிலை இந்தியாவில் இருந்து திருடப்பட்டது என்பது அறியாமலேயே அது ஏலத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையே, இங்கிலாந்து கலைப்பொருட்கள் குற்றப்பிரிவு பொலிசாரும், இந்தியா பிரைட் புராஜெக்ட் என்னும் அமைப்பைச் சேர்ந்த விஜய் குமார் என்பவரும் இந்த வெண்கல புத்தர் சிலை நாளந்தாவில் இருந்து திருட்டுப்போன அதே புத்தர் சிலைதான் என்பதை கடந்த மார்ச் மாதம் உறுதி செய்தனர்.

இந்த புத்தர் சிலை லண்டனில் நேற்று நடந்த இந்திய சுதந்திர தினவிழாவின்போது முறைப்படி அங்குள்ள இந்திய தூதரக அதிகாரி ஒய்.கே. சின்காவிடம் ஒப்படைக்கப்பட்டது.

tags ;- Britain handed 12th-century Buddha statue India tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************