யாழில் நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வாள்வெட்டு குழுவினர், இளைஞர்கள் இருவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.(sword attack jaffna ,Global Tamil News, Hot News, Srilanka news,)
வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இருவரை பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்திரவிட்டுள்ளார்.
இதன் பின்னர் இருவரும், யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் வி.இராமகமலன் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது, சந்தேக நபர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய அப்புத்துரை கிரிசன் மற்றும் இளைஞனும் படுகாயமடைந்தனர்.
பொலிஸாரால் தேடப்பட்டு வரும் வாள்வெட்டு குழுவின் முக்கியஸ்தர் வினோத் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டது என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இணுவிலைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்தப்பட்ட போதும், சாட்சிகள் அடையாளம் காட்டவில்லை.
மேலும் இருவர் பின்னர் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் ஒரு மாத காலத்துக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், வேறு இருவர் இன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சகோதரருக்கு இடையில் வாய்த்தர்க்கம்; பொல்லால் தாக்கி ஒருவர் பலி
- வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்; ஆளுநர்
- ஓட்டுநர்களின் தொழில் அபாயத்தில்; பேரூந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
- 108000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- மடுத் தேவலாயத்தில் பக்தர்களுக்கு திடீரென ஏற்பட்ட அச்சம்; இன்று ஆவணி உற்சவம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: sword attack jaffna ,Global Tamil News, Hot News, Srilanka news,