தனது கட்சியில் சேர அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் தனக்கு ரூ. 100 கோடி தருவதாகக் கூறியதாகவும், ஆனால் தனக்கு அரசியல் தெரியாததால் அதனை மறுத்துவிட்டதாகவும் நடிகர் பார்த்திபன் கூறினார். parthiban one crore cash enter politics tamil news
ஈரோட்டில் நடைபெற்ற புத்தக விழாவில் சிறப்பு விருந்தினராக சென்றிந்த நடிகர் பார்த்திபன், சினிமாயணம் என்ற தலைப்பில், தான் சினிமாவிற்கு வந்தது குறித்து உரையாற்றினார். அப்போது தான் கட்சித் தலைவர் ஒருவர் தன்னை அரசியலில் இறங்கச் சொல்லி ரூ. 100 கோடி தர முன் வந்ததாக கூறினார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன் ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டேன். என் தந்தை போஸ்ட் மேன் ஆக இருந்தார். அவரது வருமானத்தில் தான் வாழ்ந்தோம். என் அம்மா மிகவும் கண்டிப்பானவர். நல்ல பிள்ளையாக வளர்ந்தேன். படித்தேன்.
என் உறவினர் ஒருவர் சினிமா கம்பெனிக்கு கார் ஓட்டி வந்தார். அவருடன் நான் ஷூட்டிங்கை பார்க்க போனேன். அப்போது நடிகர் நாகேஷ் நடித்த படம் எடுக்கப்பட்டது. இடைவேளை நேரத்தில் நாகேஷ் சேரில் உட்காருவார். அவருக்கு குடைபிடிப்பார்கள். விசிறி வீசுவார்கள். செம கவனிப்பு.
இதையெல்லாம் பார்த்த எனக்கும் சினிமாவில் நுழைய ஆசை ஏற்பட்டது. நாடக கம்பெனியில் சேர்ந்தேன்.
பின் தான் எனது ஆசான் கே.பாக்யராஜிடம் சேர்ந்து அவருக்கு உதவியாளராக பணிபுரிந்தேன். நடிக்கவும் வாய்ப்பு வந்தது. ஆனால் எனக்கு நடிப்பதை விட டைரக்டர் ஆக தான் விருப்பம் அதிகம், என்று தொடர்ந்தும் பேசினார்.
Tags: parthiban one crore cash enter politics tamil news
<<RELATED CINEMA NEWS>>
சாமி ஸ்கொயர் படம் ரிலீசுக்கு தயாராம்
விராட் கோலி வேடத்தில் துல்கர் சல்மான்
பிறந்த நாளன்று ஆரம்பமாகிறதா அஜித்தின் அடுத்த பட பணி?
ஶ்ரீரெட்டிக்கு பதில் கொடுத்த சிம்பு!!
எமது ஏனைய தளங்கள்