வட்டவளையில் மண்சரிவு; வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

0
826
watawala landslide

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால், அந்த வீதியினூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். (watawala landslide warning drivers)

குறித்த மண்சரிவு இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வட்டவளை சிங்கள மற்றும் தமிழ் வித்தியாலயத்திற்கு இடையில் பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதனால், இதனை சீர்செய்வதற்கு வட்டவளை பொலிஸாரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகன சாரதிகள் வாகனங்களை மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் என்றும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; watawala landslide warning drivers