ரீமேக்கில் நடிக்க ஆர்வம் கிடையாது – மாதவன்

0
315
Madhavan comment remake movie tamil news

தமிழில் வெளியாகி பெருமளவு  வரவேற்பை பெற்ற படம் விக்ரம் வேதா. இப்படத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருந்தனர். இருவருக்கும் சமமான பாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. தமிழில் மாதவன் ஏற்று நடித்திருந்த பாத்திரத்தில் மீண்டும் ஹிந்தியில் நடிக்க கேட்டபோது அவர் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியானது. Madhavan comment remake movie tamil news

இதுபற்றி மாதவனிடம் கேட்ட போது, ரீமேக்கில் நடிப்பதில் எனக்கு அதிக ஆர்வம் கிடையாது, என்று கூறியதோடு,

ஒவ்வொரு முறையும் புதிய முயற்சி செய்யாமல் ரீமேக்கில் நடிப்பது என்பது ஒரே சாலையில் இரண்டு முறை நடப்பதை போன்றது. ஒரே கதைக்கு இன்னொரு தடவை அதே அளவு உழைப்பையும், எனர்ஜியையும் செலவழிக்க வேண்டும். விக்ரம் வேதாவில் செய்ய வேண்டியதை செய்துவிட்டேன். தற்போது அது உலக அளவிற்கு செல்லவேண்டும்.

Tags: Madhavan comment remake movie tamil news

எமது ஏனைய தளங்கள்