22 வயது பெண் நிர்வாணமாக குளிக்கும் காட்சிகளை முகப்புத்தகத்தில் பதிவேற்ற முயற்சித்த மூவர் கைது

0
1193
22 year old female nude bathing scene Three men tried upload facebook

22 வயதான இளம் பெண் ஒருவர் நிர்வாணமாக குளிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ காட்சிகளை இணையத்தளம் மற்றும் முகப்புத்தகத்தில் பதிவேற்றவுள்ளதாகப் பயமுறுத்திய பெண்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். (22 year old female nude bathing scene Three men tried upload facebook)

இவ்வாறு பயமுறுத்தி பத்தாயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்ட மீடியாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகளையும் அம்பலன்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதான நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக அம்பலன்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த 22 வாயதான பெண்ணின் கையடக்கத் தொலைபேசியில் இமோ மூலமாகத் தொடர்புகொண்டு மீடியாகொடையை சேர்ந்த தாயும் மகளும் மற்றும் அம்பலன்கொடையை சேர்ந்த நபரும், தங்களிடம் இந்தப் பெண் நிர்வாணமாக குளிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ உள்ளதாக பயமுறுத்தியுள்ளனர்.

இதற்கு 20,000 ரூபாவை கப்பமாக கேட்டு பயமுறுத்தியுள்ளதாகவும் கப்பமாக பணம் கொடுக்காவிட்டால், இந்தக் காட்சிகளை முகப் புத்தகத்தில் வெளியிடுவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், ‘அயிஸ்’ என்ற போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்கு பணம் தேவை எனக் கூறி, போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்றும் நடித்துள்ளனர்.

இதன்படி அம்பலன்கொடை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கியில் பணத்தை இடுமாறு வங்கிக் கணக்கையும் தெரிவித்துள்ளனர்.

இந்த 22 வயது பெண் குறித்த வங்கிக் கணக்கில் 10,000 ரூபா பணத்தை வைப்புச் செய்துள்ளார்.

எனினும் இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, அம்பலன்கொடை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெற்று இந்த மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

கப்பப் பணத்தை பெறுவதற்;காக மீடியாகொடை பெண்ணின் தாயாரின் வங்கி கணக்கை வழங்கியிருந்தனர்.

இந்த வங்கிக் கணக்கில் இருந்து 22 வயதுடைய பெண் வைப்பிலிடப்பட்ட பணத்தை மீட்டெடுத்த பற்றுச்சீட்டையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த 22 வயது பெண் நிர்வணமாகக் குளிக்கும் காட்சிகள் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்தது, அவளின் முன்னாள் காதலனான தற்போது வெளிநாட்டில் தொழில் புரியும் நபராக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த மூன்று சந்தேக நபர்களையும் நேற்று மாலை பலப்பிடிய நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 22 year old female nude bathing scene Three men tried upload facebook