பிரித்தானியா கார் விபத்தில் பலர் படுகாயம்

0
342
Many people injured car accident Britain tamil news

பிரித்தானியாவில் M25 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பெரும் வாகன விபத்தில் சிக்கி 7 குழந்தைகள் உள்ளிட்ட 40 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Many people injured car accident Britain tamil news

விபத்தில் சிக்கியவர்களில் 3 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸார், மீட்பு குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை உறுப்பினர்களும் திரளாக குவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வாகன விபத்தால் சுமார் 7 மைல்கள் தொலைவிற்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வாகன நெரிசல் முழுமையாக நீங்க நள்ளிரவாகலாம் எனவும், வாகன சாரதிகள் சுமார் 90 நிமிட தாமதத்தை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தானது சமீப காலத்தில் நடந்த முக்கிய சம்பவம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

tags :- Many people injured car accident Britain tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************