அண்மையில் காலமான மு.கருணாநிதியின் வசனத்தை பேசி தொண்டையில் இரத்தம் வந்ததாக நடிகை விஜயகுமாரி கூறியுள்ளார். கருணாநிதி பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அவர் எழுதியதில் பெயர் பெற்ற திரைப்படம் ‘பூம்புகார்’. கண்ணகியின் தூய்மையையும், வீரத்தையும் ஒவ்வொரு பாமரனுக்கு விளக்கிச் சொன்ன பெருமை கலைஞரையே சேரும். karunanithi script actress vijayakumari acting tamil news
இந்தப்படத்தில், கண்ணகியாக சி.ஆர்.விஜயகுமாரியும், கோவலனாக எஸ்.எஸ்.ராஜேந்திரனும் நடித்திருந்தனர். கோவலன், பாண்டிய நாட்டு ராணியின் கால் சிலம்பை திருடியதாக நினைத்து அவரை கொலை செய்ததன் பின் வரும் காட்சிகள் பிரதானமானவை. தன் கணவன் கோவலன் குற்றமற்றவன் என அரசவையில் கண்ணகி நிரூபிக்கும் காட்சியை பார்த்தால் இன்றும் உடல் சிலிர்த்து போகும்.
கலைஞருக்கு முன்னால் எப்படி இந்த நீளமான வசனத்தை பேசுவதென்று, விஜயகுமாரி இயக்குனர் நீலகண்டனிடம் தயங்கி நின்றாராம். அதக் கண்ட கலைஞர், எழுந்து வந்து, என்னம்மா நான் இருக்கிறது பிரச்சனையா? வெளில போய்டவா எனக் கேட்க, அப்படியில்ல என சமாளிக்க, கண்ணகியாக நடிப்பவருக்கு பயம் இருக்கக் கூடாது என தைரியமூட்டினாராம்.
தத்ரூபமாக இந்தக் காட்சி வரவேண்டும் என்று உரத்த குரலில் வசனம் பேசியதில் காட்சி படமாக்கப்பட்ட பின் தொண்டையில் ரத்தம் வரும் அளவுக்கு புண்ணாகி விட்டதாம் விஜயகுமாரிக்கு.
Tags: karunanithi script actress vijayakumari acting tamil news
<<RELATED CINEMA NEWS>>
சாமி ஸ்கொயர் படம் ரிலீசுக்கு தயாராம்
விராட் கோலி வேடத்தில் துல்கர் சல்மான்
பிறந்த நாளன்று ஆரம்பமாகிறதா அஜித்தின் அடுத்த பட பணி?
ஶ்ரீரெட்டிக்கு பதில் கொடுத்த சிம்பு!!
எமது ஏனைய தளங்கள்