4 வயது சிறுமி விழுங்கிய சில்லரைக் காசை வெளியேற்ற, பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. West Bengal Girl Swallows Coin
மேற்கு வங்க மாநிலம் நாடியாவில் கங்காபூர் இல்லத்தைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது 4 வயது பேத்தி அர்க்யா பிஸ்வாஸ். இவர் ரூ.1 காசுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக காசை வாயில் போட்டு விழுங்கியுள்ளார். அது தொண்டையில் சிக்கிக் கொண்டு, கடுமையான வலியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து பிற்பகல் 2 மணியளவில் கல்யாணி காலேஜ் ஆப் மெடிசன், ஜே.என்.எம் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அவர்கள் அர்க்யாவை சோதித்து பார்த்து, எண்டோஸ்கோபிக் மூலமாக மட்டுமே காசை வெளியேற்ற முடியும் என்று கூறினார்.
ஆனால் அந்த சிகிச்சை முறை தங்களிடம் இல்லாததால், என்.ஆர்.எஸ் மருத்துவமனை அல்லது மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து இரவு 10 மணியளவில் என்.ஆர்.எஸ் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கேயும் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை.
அவர்கள் எக்ஸ்-ரே மூலம் காசைக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அதை வெளியேற்றும் சிகிச்சை முறை தங்களிடம் இல்லை என்று கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் அங்கேயும் மருத்துவர்களால் உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை.
இதற்கிடையில் சிறுமியின் தொண்டையில் சிக்கிய காசு, மேலும் உட்சென்றுள்ளது. பின்னர் ராமகிருஷ்ண மிஷன் சேவா பிரதிஸ்தானிற்கு நள்ளிரவு சென்றனர். அங்கேயும் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். இதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனைக்கு அதிகாலை 2 மணிக்கு சென்றனர்.
உடனடியாக எண்டோஸ்கோபி மூலம் காசை அகற்றினர். அவர்களுக்கு அர்க்யாவின் கவனித்து வருவோர் மிக்க நன்றி தெரிவித்தனர். தற்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கும் அர்க்யா, மெல்ல மெல்ல பேச ஆரம்பிப்பதாக கூறுகின்றனர்.