பத்திரிகை விளம்பரம் மூலம் கிடைத்த மணமகன் : கொழும்பில் இப்படியும் ஒரு சம்பவம்

0
602
man cheating woman colombo bride paper advertisement

கொழும்பில் மணமகள் ஒருவரை மணமகன் ஏமாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.(man cheating woman colombo bride paper advertisement,Sri Lanka 24 Hours Online Breaking News,)

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

கொழும்பு, பிலியந்தலையைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான பெண் ஒருவருக்கு பொருத்தமான மணமகன் தேவை என கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பத்திரிகை ஒன்றில் பெண் வீட்டாரினால் திருமண விளம்பரம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யப்பட்ட விளம்பரத்திற்கமைய, இரத்தினபுரியில் இரத்தின கல் வர்த்தகரின் மகன் எனவும், சிவில் பொறியியலாளராக செயற்படுவதாகவும் கூறி இந்த பெண்ணின் வீட்டு நபர் ஒருவர் சென்றுள்ளார்.

அதற்கமைய வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்துள்ளார்.

அத்துடன் அந்த பெண்ணுடன் பழக ஆரம்பித்துள்ளார். இதன் போது தனக்கு அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறி பெண்ணின் மடிக்கணினியை கொண்டு சென்றுள்ளார்.

அதன் தொடர்ந்து சில நாட்கள் சென்றதும் இந்த பெண்ணின் மோட்டார் வாகனத்தையும் அந்த நபர் கொண்டு சென்றுள்ளார். பின்னர் தேடி பார்த்த போது குறித்த நபர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.

சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மிரிஹான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:man cheating woman colombo bride paper advertisement,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews,