13 வயது சிறுமியை கடத்தி குடும்பம் நடத்திய 37 வயது நபர் கைது

0
419
37 year old man arrested kidnapping 13 year old girl

நுகேகொடை பிரதேசத்தில் 13 வயதான சிறுமி ஒருவரை ஏமாற்றி, சிலாபம் பிரதேசத்திற்கு கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த 37 வயதான நபர் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். (37 year old man arrested kidnapping 13 year old girl)

இந்தச் சிறுமி வைத்தியப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது மகள் திருமணமான நபர் ஒருவருடன் சென்றுள்ளதாக கடந்த ஜூன் மாதம் 16 ஆம் திகதி இந்த சிறுமியின் தாயார் மிரிஹான பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்து, உடனடியாக பொலிஸார் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சிறுமியின் தந்தை மேல் மாகாண தெற்கு பொலிஸ் பிரிவில் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டை அடுத்து, மிரிஹானை விசேட புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்த சிறுமியை கடத்திச் சென்ற நபர், நுகேகொடை பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்ட அகழ்வு இயந்திர இயக்குநராக தொழில்புரிந்த கடான பிரதேசத்தில் வசித்தவர் என்றும் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

இதன்பின்னர் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணைகளில் குறித்த சந்தேக நபர் சிலாபத்தில் கொங்கிறீட் கல் உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றில் தொழில் செய்வதாக பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

அங்கு சென்ற விசேட பொலிஸ்குழு சந்தேக நபரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்ட போது, குறித்த நிலையத்தின் அருகில் இருந்த சிறு வீடொன்றில் இருந்து சிறுமியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த கொங்கிறீட் ப்லொக் கல் உற்பத்தி செய்யும் நிலையத்தின் உரிமையாளரிடம், குறித்த சிறுமி தனது மனைவி என அறிமுகப்படுத்தி இந்த வீட்டில் தங்கி தொழில் செய்ய அனுமதிக்குமாறு அவரிடம் கேட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது.

இந்த சந்தேகநபர் திருமணமானவர் என்றும் இவருக்கு 10 வயதுடைய பிள்ளை ஒன்று உள்ளதாகவும் இவர் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 37 year old man arrested kidnapping 13 year old girl