இன்று! (Today Horoscope 10-08-2018)
விளம்பி வருடம், ஆடி மாதம் 25ம் தேதி, துல்ஹாதா 27ம் தேதி,
10.8.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, சதுர்த்தசி திதி மாலை 6:47 வரை;
அதன் பின் அமாவாசை திதி, பூசம் நட்சத்திரம் இரவு 3:28 வரை;
அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், மரணயோகம்.
* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூராடம்
பொது : மகாலட்சுமி வழிபாடு.
.
மேஷம்:
இஷ்ட தெய்வ அருளால் நன்மை வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பெண்களால் தாய் வீட்டாரின் தேவையறிந்து உதவுவர்.
ரிஷபம்: லட்சிய மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி திருப்திகரமாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தினர் விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். மிதுனம்: தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம்.குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழில் வியாபார நடைமுறை சீராக இருக்கும். பணவரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம். கடகம்: குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். மனதில் வெகுநாள் இருந்த சஞ்சலம் தீரும்.தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். ஆதாயம் அதிகரிக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். சிம்மம்: நண்பருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபார நடைமுறை திருப்திகரமாக இருக்கும்.உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். நண்பர்களால் உதவி கிடைக்கும். கன்னி: சிலர் உங்களுக்கு இடையூறு செய்ய முயற்சிப்பர். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை அடைய விடாமுயற்சி தேவை. அளவான பணவரவு கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு செய்வதால் மனதில் அமைதி ஏற்படும். துலாம்: எதிர்கால நலன்களை கவனத்தில் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள அனு கூலத் தன்மையை பாதுகாத்திடுவீர்கள். சேமிப்புப் பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். விருச்சிகம்: உங்களின் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். பேச்சில் உற்சாகம் நிறைந் திருக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். தனுசு: திட்டமிட்ட செயல்களில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். மகரம்: உறவினரின் கூடுதல் பாசம் வியப்பைத் தரலாம். எதிர்கால நலனில் கூடுதல் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியதிருக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும்.ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். கும்பம்: அவசரப்பணியால் சிரமத்திற்கு ஆளாகலாம். தொழில், வியாபார நடைமுறை சீராக கூடுதல் முயற்சியும் உழைப்பும் உதவும். அளவான பணவரவு கிடைக்கும். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்வது கூடாது. மீனம்: மற்றவரின் அறிவுரையால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். தொழில் வியாபார நடைமுறை மந்த கதியில் இயங்கும். லாபம் சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் திடீர் செலவுக்கு பயன்படும். அரசியல்வாதிகள் பதவி பெறும் முயற்சியில் ஈடுபடுவர்.
மேலும் பல சோதிட தகவல்கள்
-
உங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா
-
பல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…!
-
பூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…?
-
வீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது
-
இராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது ??
-
காரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……
-
செவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..
-
உள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா ? அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்
-
வருமானத்தை அள்ளித்தரும் செவ்வாய்கிழமை
எமது ஏனைய தளங்கள்