வித்தியா கொலை: மரண தண்டனை கைதிகளின் மேன்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு!

0
710
Jaffna Pungudutivu Vidya Murder High Court Appeal Case

யாழ் புங்குடுதீவு மாணவி வித்தியா கடந்த 2015ம் ஆண்டு வித்தியா கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். Jaffna Pungudutivu Vidya Murder High Court Appeal Case Tamil News

இது தொடர்பில் 9 சந்தேக நபர்கள் குற்றம் சுமத்தப்பட்டு, 3 தமிழ் பேசும் மேல்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட நீதாய தீப்பாயத்தின் ஊடாக வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைகளில் இரண்டு பேர் விடுவிக்கப்பட்டதுடன், 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த ஏழு பேரும் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டை மேற்கொண்டிருந்தனர்.

இந்த மனுவை 5 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் பரிசீலனைக்கு எடுத்ததுடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ம் திகதி வரையில் அதனை ஒத்திவைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites