விரக்தியில் இலங்கை ஆதிவாசிகள் – உலக பழங்குடியினர் தினத்தை கொண்டாடப் போவதில்லை?

0
362
Sri Lankas Adivasis leader not celebrate World Aboriginal day future

(Sri Lankas Adivasis leader not celebrate World Aboriginal day future)

இனிவரும் காலங்களில் உலக பழங்குடியினர் தினத்தை தாம் கொண்டாடப் போவதில்லை என இலங்கையின் ஆதிவாசிகளின் தலைவர் விஸ்வகீர்த்தி, வனஸ்பதி வன்னிலா எத்தோ தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நிகழ்வுகளுக்கு செலவாகும் நிதியை தமது ஆதிவாசி கிராமத்தின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமன, கொட்டபக்கினிய கிராமத்தில் நேற்று நடைபெற்ற உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட அரச நிகழ்வில் பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

13 கூட்டங்களை நடத்தி, ஆதிவாசிகளின் பிரச்சினைகள் தொடர்பான மனுவை அரசாங்கத்திடம் கையளித்தோம். எனினும் பல ஆதிவாசிகளின் கிராமங்களது பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.

எனவே, இனிவரும் காலங்களின் ஆதிவாசிகள் தினத்தை கொண்டாடப் போவதில்லை. அதற்கு பதிலாக அந்த பணத்தில் கிராமத்தின் பிரதான பிரச்சினைகள் மற்றும் கல்வியை மேம்படுத்த செலவிட நான் தீர்மானித்துள்ளேன்.

ஆறு வருடங்கள் செல்லும் போது ஆறு ஆதிவாசி கிராமங்களின் பிரச்சினைகளை தீர்க்கலாம். எங்களது பரம்பரை கலாசாரத்தை பாதுகாக்க வேண்டுமாயின் எமது ஆதிவாசி குடிகளின் பட்டினியை போக்க வேண்டும்.

அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அரசாங்கம் கூடிய பங்களிப்பை வழங்கினால், அது மிகவும் முக்கியம் என வன்னிலா எத்தோ தெரிவித்துள்ளார்.

(Sri Lankas Adivasis leader not celebrate World Aboriginal day future)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites