பலாப்பழ ஐஸ் கிரீம் – உலகளவில் 3 ஆம் இடத்தை ஈட்டிய இலங்கை பெண்!

0
330
jack fruit ice cream new world record Korean food festival

(jack fruit ice cream new world record Korean food festival)

இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் உணவு தயாரிப்பு முறையில் சாதனை படைத்து உலக நாடுகளின் பார்வையை ஈர்த்துள்ளார்.

கொரியாவில் இடம்பெற்ற உலக பெண்கள் மற்றும் புதிய முயற்சியாண்மை போட்டியில் குறித்த பெண் தயாரித்த புதிய வகையான ஐஸ் கிரீம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

தெஹிஓவிட்ட அட்டுலுகம பிரதேசத்தை சேர்ந்த கே.டீ.பிரியந்தி மல்லிக்கா என்ற பெண் தயாரித்த ஐஸ் கிரீமிற்கே (குளிர்கழி) இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பலாப்பழத்தில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீம் போட்டியின் நடுவர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதற்கமைவாக அந்த போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

இதனடிப்படையில் குறித்த பெண் புதிய முயற்சியை மேற்கொண்டு சர்வதேச ரீதியான போட்டிக்கும் செல்ல வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்த வெற்றி தொடர்பில் கருத்து வெளியிட்ட மல்லிக்கா, இலங்கையில் வருடத்திற்கு 48 கோடி பலா பயிர் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

அதில் 11 கோடி பலாப்பழங்கள் மாத்திரமே பயன்பாட்டிற்கு பெற்றுகொள்ளப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் சுவையான மற்றும் இயற்கையான உணவான பலாவில் புதிதாக ஒரு முயற்சியை மேற்கொள்ள திட்டமிட்டேன்.

அந்த வகையில் ஒரு முயற்சியாகவே பலாப்பழ ஐஸ்கிரீம் தயாரிப்பை மேற்கொண்டேன். இதற்கு மேலதிகமாக கேக், பிஸ்கட் உட்பட 600 வகையான உணவுகளை பலாப்பழத்தில் தயாரிக்க முடியும்.

இந்த முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் பலருக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

எனது புதிய முயற்சிகளை முன்னெடுக்க பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தேன். பொருளாதார சிக்கல்களினால் பாதிக்கப்பட்ட நான் பல கட்ட முயற்சிகளின் பின்னரே வெற்றி பெற்றேன் என பிரியந்தி மல்லிகா தெரிவித்துள்ளார்.

(jack fruit ice cream new world record Korean food festival)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites