அவர் படம் பார்க்க 96ல் வரிசையில் நின்றேன்; 2018ல் அவருடன் பட போஸ்டரில் – நானி!!

0
100
nani shares devdas firstlook poster twitter tamil news

தமிழில் வெப்பம், நான் ஈ போன்ற படங்களில் தமிழ் மக்களுக்கு பரீட்சயமான நானி, தெலுங்கில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தையே வைத்துள்ளார். nani shares devdas firstlook poster twitter tamil news

தற்போது முதல் முறையாக நானி மற்றும் நாகார்ஜூனா முதல் முறையாக இணைந்துள்ள படம் தேவதாஸ். இந்தப்படம் ஒரு ஹாலிவூட் படத்தின் தழுவல் எனப்படுகிறது. ஸ்ரீராம் ஆதித்யா இப்படத்தை இயக்க, மணிசர்மாவின் இசை அமைப்பில், விஜயந்தி மூவிஸ் தயாரிக்கிறது.

 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அப்போஸ்டரை நானி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அன்றும் இன்றும் என்று நாகர்ஜுனா பற்றிய நினைவுகளை பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

1996 – நாகர்ஜுனா சார் திரையில் – நான் அவர் படம் பார்க்க வரிசையில்

2018 – தேவதாஸ் – நாம் இருவரும் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் – குடித்து விழுந்து

என பதிவிட்டுள்ளார்.

இந்த போஸ்டரில் ஹீரோக்கள் இருவரும் குடித்து விட்டு போதையில் விழுந்து கிடப்பது போல் காணப்படுகின்றனர்.

Tags: nani shares devdas firstlook poster twitter tamil news
<<RELATED CINEMA NEWS>>