(whatsapp message forwarding limit starts whatsapp iphone fake news)
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியின் IOS வெர்ஷனில் புதிய மென்பொருள் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ்அப் அப்டேட் ஐபோனில் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்வோருக்கு பாதகமாக அமைந்துள்ளது. அதன்படி ஐபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு அதிகமாக மெசேஜ்களை Forward செய்ய முடியாது.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் Forward மெசேஜ்களால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த அம்சம் ஜூலை 2018-இல் முதல் முறையாக அறிவிக்கப்பட்டது. புதிய அப்டேட் மூலம் போலி செய்திகளை பரப்புவதற்கு மாற்றாக, வாட்ஸ்அப் குறிக்கோளான Private Messaging ஆப் என்ற பிம்பத்தை அந்நிறுவனம் தற்காத்து கொள்ள முடியும்.
புதிய அம்சங்கள் வாட்ஸ்அப் IOS ஸ்டேபிள் வெர்ஷனில் சில நாட்கள் சோதனைக்கு பின் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து அப்டேட் செய்து கொள்ள முடியும். வாட்ஸ்அப்-இல் அதிகளவிலான போலி குறுந்தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வசதி ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com