பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களால் ஏற்படும் சமூக சீரழிவுகள் எல்லை மீறிச்சென்றுகொண்டுள்ளன. Facebook Love Affair
இத்தகைய சமூகவலைதளங்கள் ஊடாக ஒழுங்செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வுகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பிலும் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், பேஸ்புக் ஊடாக ஏற்பட்ட முறைதவறிய காதல் தொடர்பொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
16 வருட காலமாக தன்னை அன்பாக ஆதரித்த கணவனை கைவிட்டு விட்டு தனது கள்ளக்காதலனுடன் சென்ற பெண்ணொருவர் தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுவும் தன்னுடன் ஏழு நாட்களே பேஸ்புக் மூலமாக பழகிய இரண்டு பிள்ளைகளின் தகப்பன் ஒருவருடனே குறித்த பெண் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.
பெந்தொட்டையைச் சேர்ந்த 40 வயதான பெண்ணொருவரே தனது கள்ளக்காதலனோடு ஓடிச் சென்றுள்ளார்.
குறித்த பெண்ணுக்கு 15 வயதான மகள் ஒருவர் உள்ளிட்ட மூன்று பிள்ளைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் இந்த விவகாரம் பொலிஸிற்கு வந்துள்ளது.
இந்நிலையில் அப்பெண் திட்டவட்டமாக தனது புதிய காதலனுடன் செல்வதாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
தனது மனைவியின் முடிவை ஏற்க முடியாது பொலிஸ் நிலையத்தில் அழுது புலம்பிய கணவனுக்கு நிலைமையை தெளிவுபடுத்தி, ஆறுதல் அளித்து அவரின் இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் பொலிஸார்.