ஞானசார தேரருக்கு 6 வருட கடூழியச்சிறைத்தண்டனை – நீதிமன்றம் சற்றுமுன்னர் அதிரடி தீர்ப்பு

0
771
Gnanasara Thero sentenced 6 years rigorous imprisonment

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை குற்றவாளியாகக் கண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு 6 வருட கடூழியச்சிறைத்தண்டனை விதித்து சற்றுமுன்னர் தீர்ப்பளித்துள்ளது. (Gnanasara Thero sentenced 6 years rigorous imprisonment,Tamilnews)

நீதிமன்றத்தை அவமதித்தமை, சிரேஷ்ட சட்டவாதியை அவமதித்தமை, நீதிமன்ற கட்டளைக்கு அடிபணியாமை, சுயாதீன நீதிமன்ற கட்டமைப்புக்கு அழுத்தம் கொடுத்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காகவே ஞானசார தேரருக்கு மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவருக்கு கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்றையதினம் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணதிலக்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. .

அப்போது ஹோமாகம நீதவானாக இருந்த ரங்க திஸாநாயக்கவால் இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்ட நிலையில், அந்த வழக்கு விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் இன்று ஞானசாரருக்கு எதிரான தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites

Tags:Gnanasara Thero sentenced 6 years rigorous imprisonment,Gnanasara Thero sentenced 6 years rigorous imprisonment,Gnanasara Thero sentenced 6 years rigorous imprisonment