மசாஜ் நிலையங்களில் விபசாரம் ; 16 இளம் பெண்கள் கைது

0
902
Massage Salon prostitution 16 young girls arrested

ஜாஎல மற்றும் கந்தானை பிரதேசங்களில், மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த விபசார விடுதிகள் மூன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. (Massage Salon prostitution 16 young girls arrested)

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அங்கிருந்த மூன்று முகாமையாளர்களும், 16 பெண்களையும் கெலனிய பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 06 ஆம் திகதி இரவு முதல் நேற்று அதிகாலை வரை நடத்தப்பட்ட சோதனைகளின் போதே, குறித்த 16 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி ஜாஎல பிரதேசத்தில் இரண்டு விடுதிகளும், கந்தானை பிரதேசத்தில் ஒரு விடுதியும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

ஜாஎல பிரதேசத்தில் ஒரு விடுதியில் இருந்து ஒரு முகாமையாளரும் 07 பெண்களும் மற்றைய விடுதியில் இருந்து ஒரு முகாமையாளரும் 01 பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தானை பிரதேசத்திலுள்ள விடுதியில் இருந்து முகாமையாளர் ஒருவரும் 08 பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த முகாமையாளர்கள் ஜாஎல, எம்பிலிபிடிய மற்றும் தெரனியகலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த 16 பெண்களும் அனுராதபுரம், நீர்கொழும்பு, கடான, அதுருகிரிய மற்றும் ஹன்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 21 வயது முதல் 38 வயதான இளம் பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இவர்களை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கெலனிய பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜயசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Massage Salon prostitution 16 young girls arrested