யாழ் – கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மீது கல்வீச்சுத் தாக்குதல்

0
456
stone attack Jaffna Colombo train

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தின் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (stone attack Jaffna Colombo train)

இந்தத் தாக்குதலில் காயமடைந்த நபரொருவர் மயக்கமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பிரதான புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த நேற்றிரவு ஏழு மணியளவில் பயணித்த தபால் புகையிரதம், கிளிநொச்சி புகையிரத நிலையத்தை கடந்து பயணிக்கையில் அதன் மீது இனந்தெரியாதவர்கள் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் புகையிரதத்தில் பயணித்த பயணியொருவர் தாக்குதலுக்குள்ளாகி மயக்கமடைந்திருந்தார்.

இதனையடுத்து, புகையிரதம் குறித்த பகுதியில் அவசரமாக நிறுத்தப்பட்ட நிலையில், அப்பகுதி கிராமம் மக்கள் ஒன்று கூடியதை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

எனினும் இந்த சம்பவம் தெளிவுபடுத்தப்பட்டதை அடுத்து புகையிரத பயணம் தொடர்ந்ததுடன் காயமடைந்தவரை அடுத்த புகையிரத நிலையம் ஊடாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; stone attack Jaffna Colombo train