நல்லிணக்கம் புனர்வாழ்வு நடவடிக்கையிலிருந்து விலகி அபிவிருத்தி குறித்து ஆராய்கிறது அரசாங்கம்

0
356
Ranil paying attention gradual systematic implement primary education

வடக்கில் அபிவிருத்தி தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பிதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். resettlement reconciliation after development prime minister ranil

அரசாங்கத்தின் முதற்கட்ட பணியாக நல்லிணக்கம் மற்றும் புனர்வாழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது வடக்கில் அபிவிருத்தி தொடர்பிலேயே முக்கிய கவனம் செலுத்தப்படுகின்றது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொறியியல் பீட மற்றும் மாணவர்கள் விடுதி ஆகிய கட்டடத்தொகுதிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த கட்டிடங்கள் 5000 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

வடக்கில் பெருமளவிலான பிரச்சினைகள் உள்ளன. மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டிய தேவை உள்ளது. சட்டரீதியான பிரச்சினைகள் உள்ளன.

இதேவேளை, இராணுவம் மற்றும் காவற்துறை தொடர்பான பிரச்சினைகளும் நிலவுகின்றன. காணிகள் விடுவிப்பது குறித்த பிரச்சினைகளுக்கு படிப்படியான தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையிலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை காலமும் புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தியது.

இந்தநிலையில் தற்போது அபிவிருத்தி தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்படுகிறது என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
resettlement reconciliation after development prime minister ranil

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites