மன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள்; 66 மனித எச்சங்கள் மீட்பு

0
797
Excavation works Mannar 66 Human Remains Recovery

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலையம் அமைந்திருந்த பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (Excavation works Mannar 66 Human Remains Recovery)

இதுவரை மன்னார் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்கள், 440 பைகளில் பொதியிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது, முன்னதாக கண்டுபிடிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகள், மண்டை ஓடுகளை வெளியேற்றும் நோக்குடன் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் தற்போது அகழ்வு பணியானது மையப் பகுதியை விடுத்து வளாகத்தின் நுழைவு பகுதியிலேயே அதிக கவனம் செலுத்தி தோண்டப்படுகின்றது.

குறித்த இடத்திற்கு அருகாமையிலுள்ள நடை பாதையில் ஐந்து அடி ஆழத்திற்கு அகழ்வை விரிவுபடுத்திய இடத்திலும் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் நேற்றைய தினமும் சந்தேகத்திற்குரிய மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வளாகத்தில் இரு வேறு பகுதிகளில் வித்தியாசமான நிலையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், வளாகத்தின் மையப் பகுதியில் எந்தவித குழப்பமும் இன்றி ஒழுங்கான நிலையில், புதைக்கப்பட்ட மனித எச்சங்கள் சிலவும், வளாகத்தின் நுழைவு பகுதியில் ஒன்றுடன் ஒன்று சேர்த்த விதமாகவும் புதைக்கபட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.

இதுவரை குறித்த வளாகத்தில் இருந்து 66 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், 56 மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுவரை மீட்கப்பட்ட 56 மனித எச்சங்கள் 440 பைகளில் இலக்கமிடப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம், இந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் இரண்டு மோதிரங்கள் தடைய பொருட்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Excavation works Mannar 66 Human Remains Recovery