வரலாற்றில் முதன் முறையாக பண்டா கரடி, இரட்டை குட்டிகளை Beauval மிருகக்காட்சி சாலையில் கடந்தவருடம் ஈன்றது. துரதிஷ்ட்டவசமாக இரண்டில், ஒரு குட்டி உயிரிழக்க, Yuan Meng எனும் பண்டா குட்டி நல்ல ஆயோக்கியத்துடன் காப்பாற்றப்பட்டது. France Beauval Panda’s great birthday celebration tamil news
கடந்த வருடம் ஓகஸ்ட் 4 ஆம் திகதி Loir-et-Cher இல் உள்ள Beauval மிருகக்காட்சி சாலையில் இந்த பண்டா குட்டி பிறந்தது. தற்போது தனது முதலாவது பிறந்தநாளை நாளை சனிக்கிழமை கொண்டாட உள்ளது.
பிரான்ஸ் Beauval மிருகக்காட்சிசாலை நிர்வாகிகள் அதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். 140 கிராம்கள் எடையுடன் பிறந்த பண்டா குட்டி, தற்போது 30 கிலோ எடை கொண்டுள்ளது.
இதன் பிறந்தநாள் விருந்தில் பல சிறப்பு விருந்தினர்கள், அரச அதிகாரிகள் போன்ற பலர் கலந்துகொள்ள உள்ளனர். இதற்காக மிகப்பெரிய ‘கேக்’ ஒன்றும் தயாரிக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக மிருகக்காட்சிசாலை நிர்வாகிகள் தெரிவிக்கும் போது, ‘பண்டா குட்டிக்கு ஒரு வயது ஆகின்ற போதும், உணவுக்கு, அது இன்னமும் தாயிடம் தான் பால் குடிக்கின்றது’ என குறிப்பிட்டனர்.
tags :- France Beauval Panda’s great birthday celebration tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பிரான்ஸில் விலையேற்றம் காணும் மின்சாரம், எரிவாயு!
- பிரான்ஸிலுள்ள இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!
- டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்!
- நான் தான் இப்போ கேப்டன் நான் சொல்றத கேளுங்க : பாலாஜியிடம் கெத்து காட்டும் ஐஸ்