அபூர்வ தோல் நோயினால் பிளீச்சிங் போட்டு குளிக்கும் குழந்தை

0
308
us Baby bathing rare skin disease tamil news

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தாய் தனது ஒரு வயது மகளின் தோல் பிரச்சினை காரணமாக அவளை இரண்டு நாட்களுக்கொரு முறை பிளீச்சிங் போட்டு குளிக்க வைக்கிறார். ரவன் போர்டு (23) தனது குழந்தை பிறந்தபோது அது ஒரு பிளாஸ்டிக் பொம்மை போல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அமிலியா மோயி என்னும் அந்தக் குழந்தைக்கு ஒரு அபூர்வ தோல் நோய் இருப்பதால் அவளது தோல் காய்ந்து காணப்பட்டது. us Baby bathing rare skin disease tamil news

அதனால் மருத்துவர்கள் இரண்டு நாட்களுக்கொரு முறை அவளை பிளீச்சிங் போட்டு குளிக்க வைக்குமாறு கூறியுள்ளனர். அத்துடன் மோயின் தோல் உதிர்வதால் அவளுக்கு எப்போதும் மாய்ச்சரைஷர் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பிளீச்சிங் போடாவிட்டால் மோயிக்கு நோய்த்தொற்று வேறு ஏற்பட்டு விடும் என்பதால் அவளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது என்கிறார் அவளது தாயான ரவன்.

இதுபோக மோயிக்கு இன்னொரு பிரச்சினை, அவளுக்கு வியர்வை துளைகள் இல்லாததால் அவளை எப்போதும் குளிர்ச்சியாகவே வைத்துக் கொள்ள வேண்டும். தற்போது ஒரு வயதாகும் மோயின் நிலைமையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டாலும் அவளை வெளியே கொண்டு செல்லும்போது பலர் அவளை குழந்தை என்று கூட பார்க்காமல் கிண்டல் செய்வதுதான் ரவுனுக்கு கவலையாக உள்ளது. தயவு செய்து மற்றவர்களின் தோற்றத்தைப் பார்த்து அவர்களை மதிப்பிடுவதை நிறுத்துங்கள் என்கிறார் அவர்.

tags :- us Baby bathing rare skin disease tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்